
கச்சதீவு திருவிழாவைப் புறக்கணிக்கத் தீர்மானம்!
21.02.2024 10:26:54
தாம் கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவை புறக்கணிக்கப் போவதாக தமிழக வேர்க்கோடு பங்குத்தந்தை சந்தியாகு அறிவித்துள்ளார்.
இலங்கை அரசுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழக மீனவர்கள் முன்னெடுத்து வரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாகவே இம் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்” இந்தியாவில் இருந்து ஆண்டு நடைபெறவுள்ள கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவுக்கு எவரும் கலந்துகொள்ளப் போவதில்லை. மேலும் வெளிமாவட்டம் வெளி மாநிலங்களில் இருந்து கச்சதீவு திருவிழாவிற்கு படகுகளில் செல்ல பதிவு செய்தவர்கள் வீண் சிரமங்களை தவிர்க்க வேண்டும். அவர்கள் விசைப்படக்கிற்கு செலுத்திய பணம் விரைவில் மீண்டும் வழங்கப்படும்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.