மோடி பல்நாட்டு தலைவர்களுடன் கலந்துரையாடல்

19.11.2024 08:04:44

பிரேசில் நாட்டில் ஜி20 மாநாடு நடைபெற்றது. இதில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் உள்ளிட்ட பல்வேறு நாட்டு தலைவர்கள் கலந்து கொண்டார்கள்.

மாநாட்டிற்கு இடையே அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை பிரதமர் மோடி சந்தித்து கலந்துரையாடினார்.

அத்துடன் பல்வேறு நாட்டு தலைவர்களுடன் இருநாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

இந்தோனேசியாவில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட ஜனாதிபதி பிரபோவோ சுபியான்டோவை சந்தித்து பேசினார். இருவரும் சந்தித்து கொண்ட முதல் ஆலோசனை கூட்டம் இதுவாகும்.

இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மர் உடன் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
போர்ச்சுக்கல் பிரதமர் லூசிஷ் மாண்டினேக்ரோவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இருநாடுகளுக்கு இடையிலான உறவின் 50-வது ஆண்டை சிறப்பாக கொண்டாடுவது தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்பட்டது.

நோர்வே பிரதரம் ஜோனஸ் கார் ஸ்டோர், பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மெக்ரான், இத்தாலி பிரதமர் மொலோனி ஆகியோரரை சந்தித்து கலந்துரையதடினார். அப்போது இந்தியா- இத்தாலி மூலோபாய உறவை மேலும் வலுப்படுத்துவதை உறுதி செய்தனர். மேலும், 2025-2029 ஆண்டு வரையில் நடவடிக்கை திட்டம் இரு தரப்பிலும் இருந்தும் வரவேற்கப்பட்டது.