கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் மாத்திரமே பொது இடங்களில் அனுமதி !
20.11.2021 10:08:34
கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் மாத்திரமே பொது இடங்களில் அனுமதிக்கப்படுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என தமிழ்நாடு பொது சுகாதார இயக்குனர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
பொது இடங்கள், தியேட்டர், பாடசாலைகள், கல்லூரிகள், விளையாட்டு மைதானம், ஹோட்டல், விடுதி, நிறுவனங்கள், கடைகள், இதர பொழுதுபோக்கு இடங்கள், கிளப் உள்ளிட்ட இடங்களில் இருப்பவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டிருப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட இடங்களில் இருப்பவர்கள் மற்றும் அதன் உரிமையாளர்களுக்கு இது குறித்து சுகாதாரத்துறையின் துணை இயக்குனர்கள் தெரியப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவரிடம் இருந்து தொற்று பரவுவதை தடுக்கும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.