சிவகார்த்திகேயனை பாராட்டிய ரஜினி.. எதற்காக தெரியுமா?
சிவகார்த்திகேயனை பாராட்டிய ரஜினி.. எதற்காக தெரியுமா?
இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'மாவீரன்'. இப்படத்திற்காக ரஜினி சிவகார்த்திகேயனை பாராட்டியதாக வீடியோ வெளியிட்டுள்ளார். மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஜூலை 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'மாவீரன்'. இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் வெளியானது. இதில் அதிதி ஷங்கர், சரிதா, இயக்குனர் மிஷ்கின் மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ரூ.75 கோடிக்கு மேல் வசூல் செய்தது. Powered By PauseUnmute Loaded: 1.68% Fullscreen இந்நிலையில், நடிகர் ரஜினி 'மாவீரன்' படத்தை பார்த்துவிட்டு தன்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்தியதாக சிவகார்த்திகேயன் வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 'மாவீரன்' திரைப்படம் வருகிற 11-ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.