ஜனாதிபதி இந்தியா பயணம்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்தியா சென்றுள்ளார்.
ஜனாதிபதி விக்கிரமசிங்க மற்றும் தூதுக்குழுவினர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சென்றுள்ளார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
இரு நாடுகளும் இராஜதந்திர உறவுகளை ஸ்தாபித்ததன் 75ஆவது ஆண்டு நிறைவை இந்த ஆண்டு கொண்டாடும் வேளையில் இந்த விஜயம் இடம்பெற்றுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி விக்கிரமசிங்க இந்திய ஜனாதிபதி ஸ்ரீமதி. திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிற இந்திய உயரதிகாரிகளுடன் பரஸ்பர நலன்கள் குறித்து இருதரப்பு விவாதங்களை நடத்தவுள்ளார்.
இந்த விஜயமானது இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகளை மேலும் முன்னேற்றும் மற்றும் பலப்படுத்தும்.