அமெரிக்காவில் 187 ஆண்டு பழமையான தாமஸ் ஜெப்பர்சன் சிலை அகற்றம்

26.11.2021 08:19:13

பல்வேறு அரசு நிறுவனங்கள் செயல்படும் அமெரிக்காவிவின் புகழ் பெற்ற நியூயார்க் சிட்டி ஹாலில் இருந்து தாமஸ் ஜெப்பர்சன் சிலை அகற்றப்பட்டது. தாமஸ் ஜெப்பர்சன் அமெரிக்காவின் 3வது அதிபராக தேர்வு செய்யப்பட்டவர் ஆவார்.


மக்கள் அதிகம் வந்து செல்லும் வாஷிங்டனில் உள்ள இந்த நினைவுச் சின்னம் நாட்டின் தலைநகரில் பிரபலமானது. 7 மணி நேரமாக இந்த சிலையை மாற்றும் பணி கவனமாக நடந்தது. இந்தச்சிலை வரலாற்று புகழ்மிக்க சொசைட்டி ஹாலில் வைக்கப்பட்டது.
அமெரிக்காவில் அடிமை முறையை ஆதரித்தவர் ஜெப்பர்சன். அவரே 600 அடிமைகளுக்கு உரிமையாளராக இருந்தார். இதனாலேயே அவரது சிலையை வைத்திருப்பதற்கு எதிர்ப்பு இருந்து வந்தது. இதையடுத்தே அவரது சிலையை அகற்ற முடிவு செய்யப்பட்டது.சிலை அகற்றம் தொடர்பாக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் அகற்றத்திற்கு ஆதரவாகவே ஓட்டுக்கள் கிடைத்தன.


அமெரிக்காவின் மூன்றாவது ஜனாதிபதி மற்றும் சுதந்திர பிரகடனத்தின் முதன்மை எழுத்தாளர் தாமஸ் ஜெபர்சன் ஆவார். வர்ஜீனியாவின் காமன்வெல்த் ஆளுநராக இருந்த கான்டினென்டல் காங்கிரசில் உறுப்பினராகவும், முதல் அமெரிக்க வெளியுறவு செயலாளர், அமெரிக்காவின் இரண்டாவது துணைத் தலைவராகவும், வர்ஜீனியாவிலுள்ள சார்லட்டெஸ்வில்லியில் வர்ஜீனியா பல்கலைக்கழகத்தின் நிறுவனராகவும் இருந்தார்.
தாமஸ் ஜெபர்சன் அமெரிக்காவை உருவாக்கியவர்களில் ஒருவர். இந்த சிலை அகற்றத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.