
உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டி ஒத்திவைப்பு!
26.01.2021 08:59:38
சர்வதேச கிரிக்கெட் சபை உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பை அறிமுகப்படுத்தியது. டெஸ்ட் போட்டியில் விளையாடும் 8 முன்னணி அணிகள் 2019 ஆம் ஆண்டு முதல் 2021 வரை விளையாடும் டெஸ்ட் போட்டிகளின் வெற்றிகள் அடிப்படையில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டியில் சம்பியன் கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்தும்.
இறுதிப் போட்டி பிரித்தானியாவின் லண்டன் லார்ட்ஸ் மைதாத்தில் ஜூன் 10ஆம் திகதி முதல் ஜூன் 14ஆம் திகதி வரை நடைபெறும் என ஏற்கனவே ஐசிசி அறிவித்திருந்தது.
தற்போதைய நிலையில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளது.
இந் நிலையில் பிரித்தானியாவில் தற்போது கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகமாக இருப்பதால் ஐசிசி, ஜூன் 18ஆம் திகதி முதல் ஜூன் 22 ஆம் திகதி போட்டியை ஒத்திவைத்துள்ளது.