கூட்டணிக்கு காங்கிரஸ் வருமா? வராதா?.
2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருகிறது. அனேகமாக பிப்ரவரி கடைசி அல்லது மார்ச் மாதத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விடும். எனவே அதிமுக, திமுக போன்ற கட்சிகள் தொகுதி பங்கீடு மற்றும் கூட்டணி அமைப்பதில் கவனம் செலுத்தி வருகிறது. அதிமுவை பொருத்தவரை அந்த கட்சி பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து விட்டது. திமுக வழக்கம் போல தங்களது கூட்டணி கட்சிகளுடன் தேர்தலை சந்திக்கவுள்ளது.
ஒருபக்கம் சீமானின் நாம் தமிழர் கட்சி தேர்தலில் தனித்து சந்திக்கவிருக்கிறது. அனேகமாக நாம் தமிழர் கட்சியின் நிலைமைதான் தவெகவுக்கும் ஏற்படும் என்று தெரிகிறது. ஏனெனில்,
தமிழக வெற்றிக் கழகத்துடன் இதுவரை எந்த கட்சியும் கூட்டணி அமைக்கவில்லை.
காங்கிரசை தங்கள் பக்கம் இழுக்க தவெக தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. ஒருபக்கம் ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு கொடுக்க வேண்டும் என திமுகவை காங்கிரஸ் கேட்டு வருகிறது. அது மட்டுமில்லாமல் 41 தொகுதிகள், 2 ராஜ்யசபா தொகுதி, உள்ளாட்சி தேர்தலில் 20 சதவீதம் என டிமாண்ட் வைக்கிறது காங்கிரஸ். ஆனால் இந்த கோரிக்கைகளை திமுக ஏற்கவில்லை..
அதேநேரம் 70 தொகுதிகள், துணை முதல்வர் பதவி, 6 அமைச்சர்கள் கொடுப்போம் என தவெக சொல்கிறது. இந்த டீலிங் காங்கிரசுக்கு பிடித்திருந்தாலும் காங்கிரஸ் மேல்மட்ட தலைவர்கள் இந்தியா கூட்டணியில் இருக்கும் திமுகவுடனே கூட்டணி அமைக்க விரும்புகிறார்களாம்.
இதைப்பார்க்கும்போது இந்த முறையும் காங்கிரஸ் திமுகவுடன் கூட்டணி அமைக்கும் என தெரிகிறது. எனவே விஜயின் தமிழக வெற்றிக் கழகம் 2020 சட்டமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிடும் நிலை உருவாகியிருக்கிறது.