தமிழகத்தில் மேலும் 3 நாட்களுக்கு கனமழை தொடரும்!

04.09.2021 10:21:00

தமிழ்நாட்டில் 6ம் தேதி வரை மேலும் 3 நாட்களுக்கு கனமழை தொடரும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

கோவை, சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் கனமழை பெய்யும்.

நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.