நான் ஹீரோக்கள் அறைகளுக்கு செல்லாததால் ஒதுக்குகிறார்கள்

01.03.2023 15:44:59

இந்திய அளவில் பிரபல நடிகையாக இருக்கும் கங்கனா ரணாவத் தொடர்ந்து சர்ச்சை கருத்துகளை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார் இந்தி திரையுலகில் வாரிசு நடிகர் நடிகைகள் ஆதிக்கம் இருப்பதாக துணிச்சலாக சாடினார். தற்போது ஹீரோக்கள் மீது புகார் தெரிவித்து இருக்கிறார். டுவிட்டரில் ரசிகர்களுடன் கலந்துரையாடியபோது அவர்கள் கேள்விகளுக்கு பதில் அளித்து கங்கனா ரணாவத் கூறும்போது, "நான் யாரிடமும் பிச்சை எடுக்க மாட்டேன். மதிப்பு குறைவான எந்த காரியத்தையும் செய்யக் கூடாது என்று எனது தாயார் கற்றுக்கொடுத்து இருக்கிறார். இது ஆணவமா அல்லது நேர்மையா என்று சொல்லுங்கள். நான் மற்ற பெண்கள்போல் கிசுகிசுக்கள் எதிலும் சிக்குவது இல்லை. எனது தாயார் யாருடைய தயவையும் எதிர்பார்க்காமல் தன்னம்பிக்கையோடு வாழ கற்றுக்கொடுத்து இருக்கிறார். அதனால்தான் நான் கிசுகிசுக்களில் சிக்குவது இல்லை. மற்றவர்களைப்போல் ஹீரோக்கள் அறைகளுக்கு செல்வது இல்லை. இதனால் இந்தி சினிமா மாபியாக்கள் என்னை தனிமைப்படுத்தி ஒதுக்குகிறார்கள்'' என்றார்