ஆண்ட்ரூ டேட்டை இங்கிலாந்துக்கு நாடு கடத்தலாம்!

13.03.2024 08:18:45

“மனித கடத்தல் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சர்ச்சைக்குரிய நபரான ஆண்ட்ரூ டேட் மற்றும் அவரது சகோதரர் டிரிஸ்டன் ஆகியோரை இங்கிலாந்துக்கு நாடு கடத்தலாம்” என்று ரோமானிய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

 

பெட்ஃபோர்ட்ஷையர் பொலிஸார் சர்வதேச பிடியாணை உத்தரவு பெற்றுள்ளதாக அறிவித்துள்ளதை தொடர்ந்து ஆண்ட்ரூ டேட் மற்றும் டிரிஸ்டன் ஆகியோர் திங்களன்று புக்கரெஸ்டில் தடுத்து வைக்கப்பட்டனர்.

இந்நிலையில், ருமேனியாவில் இடம்பெற்று வரும் விசாரணைகள் முடிந்த பின்னரே இந்த இருவரையும் நாடு கடத்த முடியும் என்று நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

வன்புணர்வு மற்றும் மனித கடத்தல் குற்றச்சாட்டுகள் மீதான விசாரணையின் ஒரு பகுதியாக இருவருக்கும் எதிராக பிடியாணை கிடைக்கப்பெற்றுள்ளதை பெட்ஃபோர்ட்ஷையர் பொலிஸார் உறுதிப்படுத்தினர்.

இதேவேளை ஆண்ட்ரூ மற்றும் டிரிஸ்டன் டேட் ஆகியோரை நாடுகடத்துவதை ஒத்திவைத்துள்ள புக்கரெஸ்ட் மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் முடிவை தாங்கள் பாராட்டுகிறோம் என ஆண்ட்ரூவின் சட்டத்தரணி தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.