இன்னும் 24 மணிநேரத்துக்குள் இடைக்கால அரசாங்கம்
04.04.2022 05:36:40
இன்னும் 24 மணிநேரத்துக்குள் இடைக்கால அரசாங்கம் நிறுவப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுதொடர்பில் உயர்மட்டத்தில் தற்போது பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றும் அறியமுடிகின்றது.
ஜனாதிபதி மற்றும் பிரதமரிடமிருந்து இடைக்கால அரசாங்கத்தை நியமிக்கும் யோசனைக்கு சாதகமான பதில் கிடைத்துள்ளதாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவுடன் இணைந்து ஜனாதிபதி மற்றும் பிரதமரை தனித்தனியாக சந்தித்ததாக வீரவன்ச தெரிவித்தார்.