மீண்டும் முதல் இடத்தில் கோல் டைட்டன்ஸ்
லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் புள்ளிப்பட்டியலில் 'கோல் டைட்டன்ஸ்' அணி மீண்டும் முன்னிலை பெற்றுள்ளது.
'கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ்' மற்றும் 'கோல் டைட்டன்ஸ்' அணிகள் தலா 3 போட்டிகளில் விளையாடியுள்ளதுடன், அவை கலந்து கொண்ட 3 போட்டிகளில் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற 'கோல் டைட்டன்ஸ்' அணி புள்ளிப்பட்டியலில் முன்னிலை பெற்றுள்ளது.
'ஜப்னா கிங்ஸ்', 'தம்புள்ள அவ்ரா' மற்றும் 'பி லவ் கண்டி' ஆகிய அணிகள் தலா நான்கு போட்டிகளில் விளையாடியுள்ளன.
இதில் தலா இரண்டு போட்டிகளில் வெற்றிப்பெற்று தம்புள்ள அவ்ரா, ஜப்னா கிங்ஸ், மற்றும் பி லவ் கண்டி' ஆகிய அணிகள் புள்ளிப்பட்டியலில் முறையே இரண்டாம், மூன்றாம், நான்காம் இடங்களில் உள்ளன.
அதேநேரம் தாம் கலந்து கொண்ட மூன்று போட்டிகளில் இரண்டில் தோல்வியடைந்த கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணி தற்போது புள்ளிப்பட்டியலில் இறுதி இடத்தில் உள்ளது.