தமிழரசு ஆட்சியமைக்க என்பிபி ஆதரவளிக்காது!

08.06.2025 14:29:31

வடக்கு, கிழக்கில் உள்ள உள்ளூராட்சி சபைகளில் இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆட்சியமைக்க தேசிய மக்கள் சக்தி ஆதரவளிக்கவுள்ளதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்தியை அமைச்சர் பிமல் ரத்நாயக்க மறுத்துள்ளார்.

  

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் "வடக்கு, கிழக்கு உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைக்க தமிழரசுக் கட்சிக்கோ அல்லது வேறு எந்தக் கட்சிகளுக்கோ தேசிய மக்கள் சக்தி ஆதரவு வழங்காது. மக்கள் வழங்கிய ஆணையை மீறிச் செயற்படும் எண்ணம் எமது கட்சிக்கு இல்லை.

வடக்கு, கிழக்கில் எந்தச் சபைகளில் தமிழரசுக் கட்சி அதிக ஆசனங்களுடன் இருக்கின்றதோ அந்தச் சபைகளில் தமிழரசுக் கட்சி ஆட்சியமைக்க முடியும்.

மற்றைய சபைகளில் எந்தக் கட்சி அதிக ஆசனங்களுடன் இருக்கின்றதோ அந்தக் கட்சி ஆட்சியமைக்க முடியும். இதில் தேசிய மக்கள் சக்தி தலையிடாது. இதைக் குழப்பும் வகையில் மக்களின் ஆணையை உதாசீனம் செய்யும் வகையில் எந்தக் கட்சியும் செயற்படக்கூடாது எனவும் தெரிவித்தார்.