
Rare Earth Magnet உற்பத்தி திட்டத்தில் இந்தியா!
சீனா கட்டுப்பாடுகள் விதித்துள்ள நிலையில், ரூ.5,000 கோடி மதிப்பில் Rare Earth Magnet உற்பத்தி திட்டத்தை இந்தியா தொடங்குகிறது. இந்திய அரசு, அரிய பூமி காந்தங்கள் (Rare Earth Magnet) மற்றும் அதற்கான கனிமங்களின் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.3,500 கோடி முதல் ரூ.5,000 கோடி வரையிலான மாபெரும் திட்டத்தை விரைவில் அறிவிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் திட்டம் அரசின் இறுதி ஒப்புதலை அடுத்த இரண்டு வாரங்களில் பெறும் என The Economic Times செய்தி வெளியிட்டுள்ளது. |
ஏப்ரலில் சீனா, Rare Earth Elements-ன் ஏற்றுமதிக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்ததையடுத்து, உலகளாவிய விநியோக சங்கிலி பாதிக்கப்பட்டன. இதில், அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் இந்தியாவிலுள்ள ஆட்டோமொபைல் மற்றும் டெக் துறைகள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகியுள்ளன. இந்த திட்டத்தில் பங்கேற்க இந்தியாவின் முன்னணி ஐந்து நிறுவனங்கள் முன்வந்துள்ளன. ரிவர்ஸ் ஆக்ஷன் முறைமையிலான உள்கட்டமைப்பு ஊக்கத்திட்டம் மூலம் குறைந்த செலவில் அதிக உற்பத்தியை உறுதி செய்ய திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியா 6.9 மில்லியன் மெட்ரிக் டன் ரேர் எர்த் ரிசர்வுகள் வைத்துள்ளதாலும், இன்னும் மெக்னெட் உற்பத்தி தொழிற்சாலை நிலை பெரிதாக உருவாக்கப்படவில்லை. 2025-ஆம் நிதியாண்டில் மட்டும் இந்தியா 53,748 மெட்ரிக் டன் காந்தங்களை சீனாவிலிருந்து இறக்குமதி செய்துள்ளது. பாகிஸ்தான், சீனாவிற்கு அதிர்ச்சியளிக்கும் செய்தி., இந்தியா தயாரிக்கவுள்ள புதிய பினாகா ரொக்கெட் அமைப்பு பாகிஸ்தான், சீனாவிற்கு அதிர்ச்சியளிக்கும் செய்தி., இந்தியா தயாரிக்கவுள்ள புதிய பினாகா ரொக்கெட் அமைப்பு சீனா ஏற்கனவே உலகின் 90% ரேர் எர்த் மெக்னெட்டுகளை உற்பத்தி செய்கிறது. ஏப்ரல் 4 முதல், சீனா அதில் கூடுதலான ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விதித்ததனால், மே மாதத்தில் அதன் ஏற்றுமதி 61% குறைந்தது (2023ஐ ஒப்பிடுகையில்). இந்த நிலையில், இந்தியா தனது உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்தும் இந்த புதிய முயற்சி ஆட்டோமொபைல், தொழில்நுட்ப மற்றும் பாதுகாப்புத் துறைகளுக்குச் சுயாதீனத்தை உருவாக்கும் முக்கியமான படியாக பார்க்கப்படுகிறது. |