
’கட்சிக்குள் நெருக்கடி இல்லை’
24.11.2024 08:42:49
தேசியப்பட்டியல் நியமனம் தொடர்பில் கட்சிக்குள் எந்தவித நெருக்கடியும் இல்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போது இதனைத் தெரிவித்த அவர், தேசிய பட்டியல் நியமனம் தொடர்பில் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
தேசிய பட்டியலுக்காக தற்போது பரிந்துரைக்கப்பட்டுள்ளவர்கள் அனைவரும் மிகவும் பொருத்தமானவர்கள்.
நாட்டை கட்டியெழுப்புவதில் அவர்கள் அனைவருக்கும் பெரும் பொறுப்பு இருக்க வேண்டும். இந்த பட்டியலில் மிகவும் அனுபவம் வாய்ந்தவர்கள் உள்ளனர்.
வீழ்ச்சி கண்டுள்ள நாட்டையும் 220 லட்சம் மக்களையும் மீட்டெடுப்பதே எனது எண்ணப்பாடாக இருக்கிறது என்றார்.