இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த பெண்அவுஸ்திரேலியாவின் அதிகூடிய சம்பளம் பெறும் பிரதம நிறைவேற்று அதிகாரியாகி சாதனை !
05.12.2023 04:00:00
இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த ஷெமாரா விக்கிரமநாயக்க என்ற பெண், மூன்றாவது முறையாக அவுஸ்திரேலியாவின் அதிகூடிய சம்பளம் பெறும் பிரதம நிறைவேற்று அதிகாரியாகி சாதனை படைத்துள்ளார்.
இந்த ஆண்டு, அவர் Macquarie குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக 32.8 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்கள் (சுமார் 70 கோடி இலங்கை ரூபாய்) வருடாந்திர சம்பளத்திற்கு தகுதியடைந்துள்ளார்.
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில்
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், திருமதி ஷெமாரா விக்கிரமநாயக்கவின் சம்பளம் இந்த வருடம் 30 வீதத்தால் அதிகரித்துள்ளது.
பிரதம நிறைவேற்று அதிகாரியாக
2018 ஆம் ஆண்டு மெக்குவாரி குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக ஷெமாரா விக்ரமநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
திருமதி ஷெமாரா விக்கிரமநாயக்க இந்த பதவியை வகித்த முதல் பெண்மணி ஆவார்.இவர் இங்கிலாந்தில் 1962 இல் பிறந்தார்.