43 ரஷ்ய இராஜதந்திரிகளை வெளியேற்ற 4 ஐரோப்பிய நாடுகள் நடவடிக்கை
30.03.2022 07:00:00
உளவு பார்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 43 ரஷ்ய இராஜதந்திரிகளை வெளியேற்ற 4 ஐரோப்பிய நாடுகள் நடவடிக்கை எடுத்துள்ளன.
அயர்லாந்து, பெல்ஜியம், நெதர்லாந்து மற்றும் செக் குடியரசு முதலான 4 நாடுகள், நேற்று இந்த நடவடிக்கையை எடுத்துள்ளன.
போலந்து உள்ளிட்ட சில ஐரோப்பிய நாடுகள், கடந்த வாரம் மேற்கொண்ட நடவடிக்கைக்கு இணையாக இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேநேரம், யுக்ரைனின் 2 முக்கிய பகுதிகளில், இராணுவ நடவடிக்கையை கடுமையாக குறைக்க உள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
அமைதிப் பேச்சுவார்த்தையில். பரஸ்பர நம்பிக்கையை அதிகரிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், படைகுறைப்பு எந்தளவில் இடம்பெறும் என்பது குறித்த தகவல்கள் இதுவரையில், உறுதியாகத் தெரியவரவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.