ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் இன்று!

21.01.2022 10:15:00

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் இன்று(வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ளது.

கட்சியின் பிரசார செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளார்.

அத்துடன், கட்சியின் மத்திய குழுவும் நாளை கூடவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன்போது, கட்சியின் மறுசீரமைப்பு மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராயப்படவுள்ளன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையிலான முறுகல் நிலை தொடரும் நிலையில் இந்த கூட்டங்கள் நடைபெறவுள்ளன என்பதுக் குறிப்பிடத்தக்கது.