பிரபல நடிகை தன்யா ரகசிய திருமணம்?

17.12.2022 10:57:18

மாரி, காதலில் சொதப்புவது எப்படி உள்ளிட்ட படங்களை இயக்கிய பாலாஜி மோகனை தன்யா பாலகிருஷ்ணா ரகசிய திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழில் சூர்யாவின் 7-ம் அறிவு படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் தன்யா பாலகிருஷ்ணா.

காதலில் சொதப்புவது எப்படி, நீதானே என் பொன்வசந்தம், ராஜா ராணி உள்ளிட்ட படங்களில் கதாநாயகியின் தோழியாக நடித்து பிரபலமானார். தெலுங்கு படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். கன்னட படங்களிலும் நடித்துள்ளார். தன்யா பாலகிருஷ்ணா ரகசிய திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழில் தனுஷ் நடித்த மாரி, காதலில் சொதப்புவது எப்படி உள்ளிட்ட படங்களை இயக்கிய பாலாஜி மோகனை தன்யா பாலகிருஷ்ணா ரகசிய திருமணம் செய்து கொண்டதாக தெலுங்கு நடிகை கல்பிகா கணேஷ் தெரிவித்து உள்ளார். தன்யா தான் நடித்த படங்களை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிகளுக்கு வருவது இல்லை

. பட விழாக்களில் பங்கேற்க விடாமல் அவரது கணவர் தடுக்கிறார் என்றும் கூறியுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.