கடன் மதிப்பீட்டை குறைத்தது மூடிஸ் நிறுவனம்
19.04.2022 05:56:47
இலங்கையின் கடன் மதிப்பீட்டை மூடிஸ் நிறுவனம், “Caa2” இலிருந்து “Ca” ஆகக் குறைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடன் கொடுப்பனவுகளை இடைநிறுத்துவதற்கான இலங்கை அரசாங்கத்தின் முடிவைத் தொடர்ந்து மூடிஸ் நிறுவனம் இலங்கையின் இறையாண்மை மதிப்பீட்டை குறைத்துள்ளது.
இலங்கை அதன் வெளிநாட்டுக் கடன்கள் மீளச் செலுத்தாமல் இருப்பது தொடர்பில் கடந்த வாரம் அறிவித்திருந்ததைத் தொடர்ந்து இந்த தரப்படுத்தலை வெளியிட்டுள்ளது.