ரஸ்யாவுக்கு பதிலடி

28.10.2022 15:37:57

ரஸ்ய படைகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் உக்ரைனின் ஷக்தார்ஸ்க் நகரில் தொடருந்து நிலையம் மற்றும் எண்ணெய் சேமிப்பு கிடங்கு மீது உக்ரைனிய படைகள் ஏவுகணைத் தாக்குல் நடத்தியுள்ளது.

இதன் காரணமாக எண்ணெய் கிடங்கு கொளுந்து விட்டு எரிந்த நிலையில் அப்பகுதி முழுவதும் விண்ணை முட்டிய கரும்புகை காணப்பட்டுள்ளது.

ரயாவின் வான் தாக்குதலில் உக்ரைன் நகரங்களில் உள்கட்டமைப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

எண்ணெய் கிடங்குகள் மீது உக்ரைன் படைகள் வான்வெளி தாக்குதல் | Ukraine Airstrikes On Oil Depots

உக்ரைன் படைகளும் சளைக்காமல் பல்வேறு நாடுகளின் ராணுவ ஆயுதங்கள் உதவியுடன் ரஸ்யாவுக்கு பதிலடி கொடுத்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில், ஷக்தார்ஸ்க்கில் உக்ரைன் ராணுவம் நடத்திய தாக்குதலில் மளமளவென தீப்பற்றி விண்ணை முட்டும் அளவிற்கு கரும்புகை எழுந்தது.