அமைச்சர்களிடையே வெடித்தது மோதல்

16.09.2022 00:06:00

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசி 

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் அரிசி மனித பாவனைக்கு உகந்ததல்ல என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்த கருத்தை வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ நிராகரித்துள்ளார்.

நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்து அரிசி வகைகளும் மனித பாவனைக்கு ஏற்றது என அனைத்து பரிசோதனைகளும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கால்நடை தீவனத்திற்காக அரிசி

 

ஆனால் விவசாய அமைச்சர் எந்த அடிப்படையில் அவ்வாறு அறிக்கை வெளியிட்டார் எனத் தெரியவில்லை எனவும் அவ்வாறான அறிக்கை அவரிடம் இருந்தால் அதனை முன்வைக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கால்நடை தீவனத்திற்காக இந்த நாட்டிற்கு அரிசி இறக்குமதி செய்யப்படவில்லை என வர்த்தக அமைச்சர் தெரிவித்துள்ளார்.