கால்பந்து வீரர் மெஸ்சிக்கு கோவிட் தொற்று உறுதி

03.01.2022 11:48:10

அர்ஜென்டினாவின் மெஸ்சிக்கு கோவிட் தொற்று உறுதியானது.

அர்ஜென்டினா கால்பந்து வீரர் லயோனல் மெஸ்சி 34. ஏழு முறை 'பாலன் டி ஆர்' விருது வென்றுள்ள இவர், பார்சிலோனா அணியில் இருந்து விலகி பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் (பி.எஸ்.ஜி.,) அணியில் இணைந்தார். தற்போது பிரான்சில் நடக்கும் பிரெஞ்ச் கோப்பை தொடரில் பி.எஸ்.ஜி., அணிக்காக விளையாடி வருகிறார்.


சமீபத்தில் பி.எஸ்.ஜி., அணி உதவியாளருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து பி.எஸ்.ஜி., அணியினர் அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் மெஸ்சி, ஜுவான் பெர்னாட், செர்ஜியோ ரிகோ, நாதன் பிடுமஸாலா என, நான்கு பேருக்கு எவ்வித அறிகுறியும் இல்லாமல் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனையடுத்து இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதனை பி.எஸ்.ஜி., அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.