சர்ச்சையில் சிக்கிய நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி

11.06.2022 06:24:31

திருப்பதி ஏழுமலையான் கோவில் முன் இதுவரை யாரும் செய்யாத வகையில் போஸ்ட் வெடிங் ஷூட்டை நயன்தாரா, விக்னேஷ் சிவன் தம்பதி நடத்தியதால் புதிய சர்ச்சை எழுந்துள்ளது.

திருப்பதியில் காலணிகளுடன் நடமாட தடை செய்யப்பட்ட இடத்தில் நடிகை நயன்தாரா காலணி அணிந்து போஸ்ட் வெட்டிங் சூட்டில் கலந்துகொண்டது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருமணம் முடிந்ததும் சர்ச்சையில் சிக்கிய நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி!

திருப்பதி மலையில் சினிமா, சீரியல் ஆகியவற்றுக்கான படப்பிடிப்புகளை நடத்துவது, திறந்த வெளியில் வெட்டிங் சூட் நடத்துவது ஆகியவை போன்ற செயல்களுக்கு அனுமதி கிடையாது.

ஆனால் நேற்று (09-06-2022) திருமணம் ஆகி இன்று திருப்பதி மலைக்கு வந்த நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் தம்பதி இதுவரை யாரும் செய்யாத வகையில் முதன்முதலாக ஏழுமலையான் கோவில் முன் போஸ்ட் வெட்டிங் போட்டோ சூட் நடத்தியுள்ளனர்.

திருமணம் முடிந்ததும் சர்ச்சையில் சிக்கிய நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி!

ஏழுமலையான் கோவில் முன் உள்ள பகுதி, நான்கு மாட வீதிகள், லட்டு கவுண்டர், கோவில் திருக்குளம் ஆகிய இடங்களில் காலணிகளுடன் நடமாட யாருக்கும் அனுமதி கிடையாது.

ஆனால் காலணிகளுடன் நடமாட தடை விதிக்கப்பட்ட பகுதியான ஏழுமலையான் கோவில் முன்பகுதியில் நயன்தாரா காலணியுடன் சென்று போஸ்ட் வெட்டிங் ஷூட்டில் கலந்து கொண்டார்.

திருமணம் முடிந்ததும் சர்ச்சையில் சிக்கிய நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி!

அதில் காலணியுடன் நயன்தாரா கலந்து கொண்டது பக்தர்களிடையே அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

ஏழுமலையான் கோவில் முன் நயன்தாரா, சிவன் தம்பதி போஸ்ட் வெட்டிங் சூட் நடத்திய புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.