விடாமுயற்சி அதிரடி ட்ரெய்லர்!
நீண்ட காலமாக அஜித் ரசிகர்கள் காத்திருப்பில் இருந்த விடாமுயற்சி படத்தின் ட்ரெய்லரும் ரிலீஸ் தேதியும் வெளியாகியுள்ளது.
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள படம் விடாமுயற்சி. அர்ஜுன், ரெஜினா கஸாண்ட்ரா, த்ரிஷா என பலர் நடித்துள்ள இந்த படம் கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து படப்பிடிப்பில் இருந்து வந்த நிலையில் ரசிகர்கள் தொடர்ந்து படத்திற்காக காத்திருந்தனர். இந்நிலையில் படம் பொங்கலுக்கு வெளியாவதாக கூறி பின்னர் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று அஜித் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் விதமாக விடாமுயற்சி படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி வைரலாகியுள்ளது. படம் முழுவதும் அஜித்குமார் அஜர்பைஜானில் கார் ஓட்டும் காட்சிகளும், ஆக்ஷன் காட்சிகளும் இது பக்கா ஆக்ஷனான படம் என்பதை உணர்த்தும் விதமாக உள்ளன. மங்காத்தா படத்திற்கு பிறகு அஜித், அர்ஜுன் ஆக்ஷன் காம்போ மீண்டும் இணைந்துள்ள
விடாமுயற்சி பிப்ரவரி 6 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.