விஜய் மகன் சஞ்சயின் படத்தை நிராகரித்த சிவகார்த்திகேயன்!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவரது மகன் சஞ்சய். இவர் சமீபத்தில் ’டிரிக்கர்’ என்ற குறும்படம் இயக்கினார்.
இதையடுத்து, நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சயும் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகவுள்ளார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.தமிழ் சினிமாவின் புதிய இயக்குனராக சஞ்சய் அறிமுகமாகவுள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில் இப்படத்தின் ஹீரோவாக பலரது பெயர் அடிபட்டது. அதேபோல் இப்படத்திற்கு முதலில் ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் அமீன் இசையமைப்பார் என்று கூறப்பட்ட நிலையில், அனிருத் இப்படத்திற்கு இசையமைப்பார் என்ற தகவல் வெளியானது.
இந்த நிலையில், விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குனராக அறிமுகமாகும் படத்தில் மல்லுவுட் ஹீரோ துல்கர் சல்மான், அதர்வா, அல்லது துருவ் விக்ரம் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் உறுதி செய்யப்படவில்லை.
சினிமா மேக்கிங் மற்றும் டைரக்சன் பற்றி லண்டனின் படித்துள்ள ஜேசன் சஞ்சய், யாரிடமும் உதவி இயக்குனராகப் பணியாற்றாத நிலையில் இவரது முதல் இப்படத்தில் நடிகர்கள், டெக்னீஷியன்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.
இதற்கிடையில், ஜேசன் சஞ்சய் நடிகர் சிவகார்த்திகேயனை அணுகி கதையை கூறியதாகவும், இதைக் கேட்டுவிட்டு இது தனக்கேற்ற கமர்ஷியல் அம்சங்கள் உள்ள கதையில்லை என்று சிவகார்த்திகேயன் நிராகரித்ததாக கூறப்படுகிறது.
அதேசமயம் விஜய்யை கேட்காமலேயே ஜேசன் விஜய் சினிமாவிக்கு வந்துவிட்டதால், இப்படத்தில் நடித்தால் அவரது அதிருப்திக்கு ஆளாக நேரிடும் என்பதாலும் சிவகார்த்திகேயன் இப்படத்தை நிராகரித்ததாக கூறப்படுகிறது.
அதேபோல் இப்படத்தில் அதிதி சங்கர் நடிக்கிறார் என கூறப்பட்ட நிலையில், இப்படம் பற்றி அவர் கதையே கேட்கவில்லை என கூறப்படுகிறது
.
இதனால் ஜேசன் சஞ்சய்யின் முதல் படத்தில் நடிக்கவுள்ள ஹீரோ யார்? ஹீரோயின் யார்? என்பது குறித்த கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
ஆனால், இப்படம் பிரமாண்டமாக தயாரிக்க லைகா முடிவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.