தமிழகத்தில் அதிரடி: 100 டி.எஸ்.பி.க்கள் இடமாற்றம்

04.02.2024 13:34:07

சென்னை, நாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள 100 டி.எஸ்.பி.க்களை பணியிட மாற்றம் செய்து டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

3 ஆண்டுகள் ஒரே இடத்தில் பணிபுரியும் காவல்துறையினரை உடனடியாக மாற்ற வேண்டும் என டி.ஜி.பி. ஏற்கனவே சுற்றறிக்கை அனுப்பி இருந்த நிலையிலேயே, இந்த இடமாற்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.