நாங்குநேரியில் பள்ளி மாணவர் மீது தாக்குதல்: செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. கண்டனம்

12.08.2023 11:40:39

தமிழ்நாட்டின் விலைமதிப்பற்ற கானுயிரைக் காக்க நமது அரசு உறுதிபூண்டுள்ளது. கோயம்புத்தூரில் நடந்து வரும் யானைகள் பாதுகாப்பு மாநாடும் இதனை மேலும் வலுப்படுத்தும். சென்னை: உலக யானைகள் தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:- தமிழ்நாட்டின் விலைமதிப்பற்ற கானுயிரைக் காக்க நமது அரசு உறுதிபூண்டுள்ளது. அகத்தியமலை யானைகள் காப்பக அறிவிப்பு, இரு யானை முகாம்கள் மேம்படுத்தல், சிதைந்த காடுகளை மீளுருவாக்கம் செய்து மீட்டெடுப்பது, யானைப் பாதுகாவலர்களின் நலன் காப்பது, வனத்துறை நவீனமயம், தெர்மல் கேமராக்களைக் கொண்டு செயற்கை நுண்ணறிவு (எ.ஐ.) மூலம் யானைகள் கண்காணிப்பு உள்ளிட்ட புதுமையான தீர்வுகள் என யானைகளைக் காப்பதில் உறுதியாக இருக்கிறோம். கோயம்புத்தூரில் நடந்து வரும் யானைகள் பாதுகாப்பு மாநாடும் இதனை மேலும் வலுப்படுத்தும். அனைவரும் இணைந்து உருவத்தால் பெரிய இந்த அழகிய உயிரினத்தின் எதிர்காலத்தைப் பாதுகாப்போம். இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.