தமிழக அரசின் நிவாரணப் பொருட்கள் அரசாங்கத்திடம் கையளிப்பு!
08.12.2025 14:00:00
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வேலைத்திட்டத்திற்குத் தொடர்ச்சியாக ஆதரவை வெளிப்படுத்தும் வகையில், தமிழக அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட பெருமளவான நிவாரணப் பொருட்கள் நேற்று பிற்பகல் கொழும்பு துறைமுகத்தில் பொறுப்பேற்கப்பட்டன. இந்நிகழ்வில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க ஆகியோர் கலந்துகொண்டனர்.