பயோபிக்கில் நடிக்க விரும்பும் பூஜா

21.10.2021 10:46:01

 

பிரபல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்த பின்னர், அதன்பிறகு ஒரு காலகட்டத்தில் கதையின் நாயகியாகவும் வரலாற்று கதாபாத்திரங்களிலும் நடிக்கும் விரும்புகின்றனர் முன்னணி நடிகைகள். குறிப்பாக புகழ் பெற்றவர்களின் வாழ்க்கை வரலாற்றில் நடிப்பதற்கு அவர்கள் ரொம்பவே ஆர்வம் காட்டுகின்றனர். அந்த வகையில் பாலிவுட்டை சேர்ந்த கங்கனா ரணவத், ஜான்சிராணியின் வாழக்கை வரலாறாக உருவான மணிகர்ணிகா மற்றும் மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி உருவான தலைவி வெளியான படங்களில் அவர்களது கதாபாத்திரங்களில் நடித்தார்.

இந்தநிலையில் பூஜா ஹெக்டேவும் அப்படி ஒரு பிரபலத்தின் சுயசரிதையில் நடிக்க ஆசை ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார். சமீபத்தில் தனது சோசியல் மீடியா பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடினார் பூஜா ஹெக்டே. அப்போது தனக்கு ஜெய்ப்பூர் மூன்றாவது மகாராணி காயத்ரி தேவியின்யின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை இருப்பதாக கூறினார். ஜெய்ப்பூர் மகாராணியான காயத்ரிதேவி 12 வருடங்கள் பாராளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியவர் ராஜமாதா என ஜெய்ப்பூர் மக்களால் அன்புடன் அழைக்கப்பட்ட இவர், எமர்ஜென்சி காலத்தில் கைது செய்யப்பட்டு சிறை சென்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.