விஜய்சேதுபதியை வைத்து படம் இயக்க முடியாது- சேரன் உறுதி

07.08.2023 09:16:03

இயக்குனர் சேரன் பல படங்களை இயக்கியுள்ளார். இவர் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். பாரதி கண்ணம்மா, தேசிய கீதம், வெற்றிக் கொடி கட்டு, பாண்டவர் பூமி, சொல்ல மறந்த கதை, ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து உள்ளிட்ட பல சிறந்த படங்களை இயக்கியவர் சேரன். படங்களை இயக்குவதோடு மட்டுமல்லாமல் சில இயக்குனர்களின் படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்திருந்தார். இயக்குனர் சேரன் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டிருந்தார். பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த இவரிடம் விஜய் சேதுபதிக்கு படம் இயக்குவது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, "அது இனிமேல் பண்ண முடியாது. அவரோட நிலை உயர்ந்துவிட்டது. அவருக்கான கதை மாற்றப்பட வேண்டும் மற்றும் அவர் மிகவும் பிசியாக இருக்கிறார். அதனால் தற்போது அந்த படம் பண்ண முடியாது" என்று கூறினார்.