பிரபாஸின் கல்கி பட டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

06.06.2024 07:05:00

கமல்ஹாசன்,பிரபாஸ் நடிப்பில் நாக் அஸ்வின் இயக்கும் பிராஜக்ட் கே படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். இந்த படத்தில் நடிக்க 20 நாட்களுக்கு கமல்ஹாசனுக்கு 150 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. கமல்ஹாசன் இணைந்துள்ளதால் இந்த படத்தின் மதிப்பு இப்போது பல மடங்கு அதிகமாகியுள்ளது.
 

கல்கி ஏடி 2898 எனப் பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் அமெரிக்காவில் கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது. இந்த படத்தின் முதல் பாகத்துக்கானஷூட்டிங் நடந்து முடிந்துள்ளது. கமல்ஹாசன் இந்த படத்தின் முதல் பாகத்திற்கான தன்னுடைய 15 நிமிடக் காட்சிகளை நடித்து முடித்துள்ளார் என சொல்லப்படுகிறது. ஜூன் 27 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 

இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் ஜூன் 10 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி கவனம் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.