மதுராந்தகத்தில் இன்று களமிறங்கும் விஜய்!
|
மதுராந்கம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தவெக, திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட்கள், நாம் தமிழர் என 5 முனை போட்டி நிலவுகிறது. தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில், மதுராந்தகம் இடைத்தோ்தலில் தவெக வேட்பாளா் மரகதம் குமரவேலை ஆதரித்து தொழுப்பேடு, ஆத்தூா் அருகேயுள்ள திறந்தவெளி மைதானத்தில் முதல்வா் விஜய் இன்று மதியம் 3 மணிக்கு பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார். |
|
மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 9 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் ஆளும் கட்சியான தவெக, திமுக, அதிமுக, நாதக, கம்யூனிஸ்ட்கள் என ஐந்து முனைப் போட்டி நிலவி வருகிறது. தேர்தலையொட்டி அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை ஆதரித்து தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளில் பிரசாரம் மேற்கொள்ள முதல்வர் விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தன. சட்டப்பேரவைத் தேர்தலில் மதுராந்தகம் தனித் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் தற்போது தவெக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். தவெக வேட்பாளா் மரகதம் குமரவேலை ஆதரித்து தொழுப்பேடு, ஆத்தூா் அருகேயுள்ள திறந்தவெளி மைதானத்தில் முதல்வா் விஜய் இன்று மதியம் 3 மணிக்கு பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார். இந்நிகழ்ச்சிக்காக சென்னையில் இருந்து கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக பூஞ்சேரி, திருக்கழுக்குன்றம், ஈசூர் - பூதூர், மதுராந்தகம் வழியாக வந்து அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள ஆத்தூர் சுங்கச்சாவடி வழியாக மைதானத்தை முதல்வர் விஜய் அடைகிறார். 5 ஆயிரம் பேருக்கு அனுமதி மதியம் 3 மணிக்கு முதல்வர் விஜய் பொதுக் கூட்டத்தில் பேசவுள்ளார். முதல்வர் வரும் சில குறிப்பிட்ட வழிகளில் தவெக மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் வரவேற்பு அளிக்கவுள்ளனர். காவல் துறை அனுமதிக்காந வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்பையில் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனய கியூஆர் கோடுடன் கூடிய நுழைவுச் சீட்டு அளிக்கப்பட்டுள்ள 5 ஆயிரம் பேர் மட்டுமே இந்நிகழ்ச்சியில் அனுமதிக்கப்படவுள்ளனர். |