யாழில் 76 ஆவது சுதந்திர தின கொண்டாட்டம்
இலங்கையின் 76 ஆவது சுதந்திர தின கொண்டாட்டம் இன்று (04) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
"சமூக நீதிக்கான சுதந்திர நடைபவணி" எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணம் பொது நூலகத்தின் முன்பாக இருந்து ஆரம்பமான இந்த நடைபவணி யாழ் நகர் ஊடாக சென்று வீரசிங்கம் மண்டபத்தை சென்றடைந்தது.
யாழ். சிவில் சமூக நிலையம், யாழ் மகளிர் முன்னணி, யாழ். இளைஞர் பௌத்த சங்கம், யாழ். அம்பேத்கர் இயக்கம் மற்றும் தமிழ் ஆயுதக்குழுக்களால் காணாமலாக்கப்பட்டோர் உறவுகள் சங்கம் ஆகிய அமைப்புகளின் ஏற்பாட்டில் இந்த நடைபவணி இடம்பெற்றது.
இதன்போது கலந்துகொண்ட மக்கள் இலங்கை தேசிய கொடியை கையில் ஏந்தியவாறு சென்றிருந்த அதே வேளை, மோட்டார் சைக்கில் மற்றும், முச்சக்கர வண்டிகளிலும் தேசிய கொடி கட்டப்பட்டு பேரணி இடம்பெற்றது.
அத்தோடு மேள வாத்தியம், பேண்ட் வாத்தியம், காவடி நடனம், கண்டிய நடனம் போன்ற நிகழ்வுகளும் இடம்பெற்று இருந்தமை குறிப்பிடத்தக்கது.