10 மில்லியன் தடுப்பூசிகள் பிரான்ஸில் போடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் தகவல் !

27.03.2021 09:20:25

பிரான்ஸில் 10 மில்லியன் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ஒலிவர் வ்ரான் தெரிவித்துள்ளார்.

நேற்று (வெள்ளிக்கிழமை) சுகாதார அமைச்சர் ஒலிவர் வ்ரான், தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.

இதன்மூலம் ஐரோப்பிய நாடுகளில் அதிக தடுப்பூசிகள் போடப்பட்ட நாடுகளில் பிரான்ஸ் முதலிடத்தை பிடித்துள்ளது.

7,519,740 பேர் குறைந்தது ஒரு தடுப்பூசியாவது போட்டுக்கொண்டுள்ளனர். 2,653,261பேர் தங்களது இரண்டாவது தடுப்பூசிகளை போட்டுக்கொண்டனர்.

பிரான்ஸில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றினால், 44இலட்சத்து 65ஆயிரத்து 956பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 94ஆயிரத்து 275பேர் உயிரிழந்துள்ளனர்.