ஆபத்தான கட்டத்தில் மாவை!

29.01.2025 09:16:40

தமிழரசு கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜா ஆபத்தான கட்டத்தில் இருப்பதாக யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் சத்தியமூர்த்தி முகநூலில் பதிவிட்டுள்ளார்.

மாவை சேனாதிராஜா தீவிர சிகிச்சை பிரிவில் தற்போதும் சிகிச்சை பெற்று வருகின்றார். நேற்று காலை தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்ட நிலையில் CT scan பரிசோதனையில் வைத்திய நிபுணர்கள் தலையில் கணிசமான அளவில் இரத்தப் பெருக்கு இருப்பதை கண்டறிந்தனர்.

அவருக்கு மூளையில் ஏற்பட்ட இரத்த கசிவு காரணமாக ஆபத்தான நிலையில் செயற்கை சுவாச உதவியுடன் சிகிச்சையில் உள்ளார். என்று அந்தப் பதிவில் கூறப்பட்டுள்ளது.