வரும் 15ம் தேதி யாவரும் வல்லவரே ரிலீஸ்

06.03.2024 07:00:00

சென்னை: சமுத்திரக்கனி, யோகி பாபு, ரமேஷ் திலக், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், இளவரசு, மயில்சாமி, போஸ் வெங்கட், ஜோ மல்லூரி, போஸ்டர் நந்தகுமார், சேரன் ராஜ், ‘சைத்தான்’ அருந்ததி, ‘மெட்ராஸ்’ ரித்விகா, தேவதர்ஷினி நடித்துள்ள படம், ’யாவரும் வல்லவரே’. வரும் 15ம் தேதி திரைக்கு வரும் இப்படம் குறித்து இயக்குனர் ராஜேந்திர சக்ரவர்த்தி கூறியதாவது:

நிஜ வாழ்க்கையில் மட்டுமல்ல, சினிமாவிலும் அன்பு தோற்றதில்லை. அதுபோன்ற ஒரு அன்பை மையமாக வைத்து, ஹைப்பர்-லிங்க் கதையாக உருவாக்கப்பட்டுள்ள படம் இது. திருச்சி, தொழுதூர், பெரம்பலூர், திட்டக்குடி, சென்னை, உளுந்தூர்பேட்டை, பெரியபாளையம், வடமதுரை, திருவேற்காடு ஆகிய பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. இளைஞர்கள், குடும்பம் என்று ரசிகர்களைப் பிரிக்க முடியாது.

6ல் இருந்து 60 வரை அனைவருக்குமான படமாக இது உருவாகியுள்ளது. இன்றைய காலகட்டத்தில் அதீத வன்மம், வெறுப்பு வளர காரணம், மனதிற்குள் தேங்கியிருக்கும் அன்பை தொலைத்து விட்டு ஓடிக்கொண்டு இருப்பதுதான். அதை மீட்டெடுக்கும் முயற்சிதான் இப்படம். இரட்டை அர்த்த வசனங்களோ, அருவருக்கத்தக்க காட்சிகளோ இருக்காது. படத்தில் நடித்த நடிகர், நடிகைகளுடன் இணைந்து, ஒரு முன்னணி நடிகரின் போட்டோ படம் முழுக்க பயணம் செய்யும்.