கோட்டாபய - ரணில் அரசாங்கம் இரு வாரங்களில் தோல்வி

25.05.2022 00:10:00

அரசாங்கம் பொதுமக்களுக்கு சலுகைகளை வழங்கத் தவறியதன் தெளிவான அறிகுறியாக இன்று காலை எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

இன்று ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய ரஹ்மான், இலங்கையில் பணவீக்கம் ஆறிலிருந்து 32 வீதமாக அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் அரசாங்கம் அமைத்து கடந்த இரண்டு வாரங்களில் மக்களின் பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காணத் தவறியுள்ளனர்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயரும்.

இதனால், இலங்கையில் வாழ்க்கைச் செலவு தாங்க முடியாத நிலையை எட்டியுள்ளதாக முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.