
சூரரைப்போற்று ஹிந்தி ரீமேக்கிற்கு எழுந்த சிக்கல்
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் சூரரைப்போற்று படம் ஓ.டி.டியில் ரிலீசானது. தியேட்டர்களில் வெளியானால் எந்த அளவுக்கு வரவேற்பு பெறுமோ அந்த அளவுக்கு ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று மிகப்பெரிய வெற்றியும் பெற்றது. இந்த படம் இந்தியில் ரீமேக் ஆகிறது. இதையும் சுதாவே இயக்குவதாக சூர்யாவின் 2டி நிறுவனம் அறிவித்தது
இந்த நிலையில் தமிழில் சூரரைப்போற்று படத்தை சூர்யாவின் 2டி நிறுவனத்துடன் இணைந்து தயாரித்த சிக்யா என்டர்டைன்மென்ட் நிறுவனத்தைச் சேர்ந்த குநீத் மொங்கா என்பவர் ஹிந்தி ரீமேக் ரைட்ஸை விற்றதில் ஏற்கனவே உள்ள ஒப்பந்தத்தின்படி தன்னுடன் கலந்தாலோசிக்காமல் சூர்யா தன்னிச்சையாக செயல்பட்டுள்ளார் எனக் கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இதனை விசாரித்த உயர் நீதிமன்றம் சூரரைப்போற்று இந்தி ரீமேக்கிற்கு தற்காலிகமாக தடை விதித்து உள்ளது. மேலும் இரு தரப்பினரும் நட்பு ரீதியாக சுமுகமாகப் பேசி இந்த விஷயத்தில் ஒரு முடிவுக்கு வர வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.