சிபிஐ விசாரணையில் நடந்தது என்ன?

13.01.2026 12:21:51

கரூர் சம்பவம் தொடர்பாக தவெக தலைவர் விஜய் நேற்று காலை டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்திற்கு நேரில் சென்று வாக்குமூலம் அளித்தார். அப்போது அவரிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டது. 2ம் நாளான இன்றும் விசாரணை நடக்கவிருந்தது. ஆனால், பொங்கல் முடிந்து மீண்டும் ஒரு நாள் விசாரணைக்கு வருகிறேன் என சிபிஐ அதிகாரிகளிடம் விஜய் கேட்டதால் அவர்களும் ஒப்புக் கொண்டார்கள். இதையடுத்து விஜய் சென்னை திரும்பியிருக்கிறார்.
இந்நிலையில் செய்தியாளிடம் பேசிய தவெக முக்கிய நிர்மல் குமார் பல முக்கிய தகவல்களை கூறியிருக்கிறார்.

ங்கள் தலைவரிடம் நேற்று விசாரணை நடந்தது. அவருக்கு அனுப்பி இருந்தது விட்னஸ் சம்மன்தான். பொங்கல் பண்டிகை மற்றும் வேறு சில அரசியல் தொடர்பான வேலைகள் இருப்பதால் பொங்கல் முடிந்தபின் மீண்டும் ஒரு நாள் விசாரணைக்கு ஒத்துழைப்பு தருவதாக எங்கள் தலைவர் சொன்னதை சிபிஐ அதிகாரிகளும் ஏற்றுக் கொண்டார்கள். இன்னும் இரண்டு நாட்களில் எந்த தேதி சரியாக வருமோ அந்த தேதியில் முடிவு செய்து சிபிஐ அதிகாரிகளிடம் தெரிவிப்போம்.

கரூர் சம்பவத்தை பொருத்தவரை அங்கே என்ன நடந்தது என எல்லோருக்கும் தெரியும்.. உதாரணத்திற்கு சட்டசபையில் கரூர் சம்பவம் பற்றி பேசிய முதல்வர் ஸ்டாலின் 607 போலீசார் அங்கு பணியில் இருந்ததாக சொன்னார் .ஆனால் டிஜிபி டேவிட்சன் 500 காவலர்கள் பாதுகாப்பு பணியில் இருந்ததாக சொன்னார்.

சின்ன விஷயத்திலேயே இவ்வளவு முரண்பாடுகள் இருக்கிறது.. இப்படி பல புகார்களை நாங்கள் சிபிஐ அதிகாரிகளிடம் ஆதாரத்துடன் கொடுத்திருக்கிறோம்.அவர்கள் விசாரணை செய்வார்கள்.. நல்ல முடிவு வரும் என எதிர்பார்க்கிறோம்.. ஜனநாயகனை பொருத்தவரை அந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இருப்பதால் நாங்கள் இப்போது எதுவும் பேச முடியாது’ என தெரிவித்தார்.