துருக்கி இராணுவ விமானம் மோதி 20 பேர் உயிரிழப்ப
துருக்கி சி-130 ராணுவ சரக்கு விமானம் ஒன்று ஜோர்ஜியாவில் விபத்துக்குள்ளாகியது. இந்த விபத்தில் விமானம் வெடித்து சிதறியதில் விமானத்தில் பயணித்த 20 பேரும் உயிரிழந்துள்ளனர்
துருக்கி இராணுவத்திற்கு சொந்தமான சி-130 ரக சரக்கு விமானம் நேற்று அசர்பைஜானில் இருந்து புறப்பட்டது. துருக்கி வந்து கொண்டிருந்த அந்த இராணுவ விமானத்தில் 20 பேர் பயணித்தனர்.
இந்நிலையில் ஜோர்ஜியா நாட்டின் எல்லைக்குள் பறந்துகொண்டிருந்தபோது விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம் மலையில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் விமானம் வெடித்து சிதறியது. இந்த சம்பவத்தில் விமானத்தில் பயணித்த 20 பேரும் உயிரிழந்தனர்.
இதையடுத்து விபத்து நடந்த பகுதியில் மிட்புபணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அஜர்பைஜான்- ஜார்ஜியா எல்லையில் பறந்து கொண்டு இருந்த போது திடீரென கீழே நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தை துருக்கியின் பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தி அறிவித்துள்ளது.
விமானத்தில் எத்தனை பணியாளர்கள் இருந்தனர் என்பது தெளிவாக தெரியவில்லை. அஜர்பைஜான் மற்றும் ஜார்ஜியா நாட்டு அதிகாரிகளுடன் இணைந்து தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கை தொடங்கப்பட்டு உள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சி-130 ராணுவ சரக்கு விமானங்கள் துருக்கியின் ஆயுதப் படைகளால் பணியாளர்களை கொண்டு செல்லவும் தளவாடங்களை கையாளுவதற்கும் பரவலாக பயன்படுத்தப்படுகின்றன.