பேரறிவாளன் வெளி வந்தால் அனைவரையும் விடுதலை செய்ய வாய்ப்பு !

02.05.2022 18:38:35

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி முப்பது வருடங்களுக்கு மேலதிகமாக சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனை விடுதலை செய்தால் மீதி அனைவரையும் விடுதலை செய்வார்கள் என சங்கர் தெரிவித்துள்ளார் .

ஐபிசி தமிழின் மெய்ப்பொருள் நிகழ்ச்சிக்கு கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ப.ஜா‌.க அரசாங்கம் இவர்கள் அனைவரையும் சாகும் வரை சிறை தண்டை அனுபவிக்க வைக்கவே திட்டம் போட்டு செயற்படுவதாக குற்றம் சுமத்தினார்.

ராஜீவ்காந்தியின் குடும்பமே குறித்த வழக்கில் கைதானவர்களை மன்னித்து விட்டார்கள் அப்படி இருக்கையில் மத்திய அரசு யார் இவர்களை தண்டிக்க என்றும் கேள்வி எழுப்பினார் .