காசாவுக்கான மனிதாபிமான பங்களிப்பு

27.03.2024 07:46:54

கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தினால் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட காசா மக்களுக்கான மனிதாபிமான நடவடிக்கைக்கு ரூ. 3 இலட்சம் கையளிக்கப்பட்டுள்ளது.

வலயக் கல்வி அலுவலகத்தில் வலயக் கல்விப்பணிப்பாளர் தலைமையில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற இப்தார் நிகழ்வின் போதே காசோலை வழங்கப்பட்டுள்ளது.

 

வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹூதுல் நஜீமிடம் கணக்காளர் வை.ஹபீபுல்லாஹ் முதற்கட்ட காசோலையை வழங்கி வைத்தார். இந்நிகழ்வில் பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.எச்.எம்.ஜாபிரும் பங்கேற்றிருந்தார்.

வலயக் கல்விப் பணிப்பாளரின் வழிகாட்டலுக்கமைய கணக்காளரின் நெறிப்படுத்தலில் வலயக்கல்வி அலுவலக கல்விசார், கல்விசாரா ஊழியர்கள் மற்றும் அதிபர்களின் நிதிப்பங்களிப்புடன் இத்தொகை வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

வருடந்தோறும் இடம்பெறும் இப்தார் நிகழ்வுக்கான செலவீனத்தை மட்டுப்படுத்தியே இத்தொகை திரட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் முன்வைப்புக்கு அமைவாகவே வழங்கப்பட்டுள்ளது.