கீரிமலை கடலில் மூழ்கி இளைஞன் ஒருவர் காணாமல் போயுள்ளார்

06.10.2021 09:00:00

யாழ்ப்பாணம் கீரிமலை கடலில் குளித்துக்கொண்டு இருந்த இளைஞன் ஒருவர் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளார். 

தட்டாதெருவை சேர்ந்த சூரியகாந்தன் சஞ்சிவன் (வயது 19) எனும் இளைஞனே காணாமல் போயுள்ளார். 

தனது நண்பர்கள் இருவருடன் கீரிமலை கடலில் நீராடிக்கொண்டு இருந்த வேளை காணாமல் போயுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. 

சம்பவம் தொடர்பில் காங்கேசன்துறை பொலிஸாருக்கும் , கடற்படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து , காணாமல் போன இளைஞனை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.