விபத்துக்குள்ளான டெல்லி விமானம்.. எத்தனை பேர் பலி?

24.02.2026 12:43:35

ராஞ்சி விமான நிலையத்திலிருந்து டெல்லி நோக்கி புறப்பட்ட ஆம்புலன்ஸ் விமானம், புறப்பட்ட 20 நிமிடங்களிலேயே கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்து வனப்பகுதியில் விழுந்து நொறுங்கியது. 

இந்த கோர விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 7 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிரிழந்தவர்களின் முழுமையான விவரங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.

மோசமான வானிலை காரணமாகவே இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. மீட்புப்படையினர் விரைந்து செயல்பட்டதில், பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ஒருவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தற்போது அவர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார். 

விபத்து நடந்த பகுதியில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதுடன், விபத்துக்கான சரியான காரணம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.