நேற்று 41, இன்று 17.. நடிகை அனுஷ்கா

09.11.2022 11:26:28

பிரபல நடிகை அனுஷ்கா ஷெட்டி நேற்று தனது 41வது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் இன்று அவர் திரையுலகில் அறிமுகமாகி 17 ஆண்டுகள் ஆனதை அடுத்து ’அனுஷ்கா 17’ என்ற ஹேஷ்டேக் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

நடிகை அனுஷ்கா, நாகார்ஜூன் நடித்த ‘சூப்பர்’ திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானார். இந்த படம் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

இந்த படத்தின் வெற்றியை அடுத்து அவர் தொடர்ந்து பல தெலுங்கு திரைப்படங்களில் நடித்தார். மாதவன் நடித்த ’ரெண்டு’ என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்த அனுஷ்கா, அதன்பின் தமிழில் வேறு வாய்ப்புகள் கிடைக்காததால் தொடர்ந்து தெலுங்கில் நடித்து வந்தார்.

 

 

இந்த நிலையில் அனுஷ்கா நடித்த ’அருந்ததி’ என்ற திரைப்படம் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் தமிழிலும் டப் செய்யப்பட்டு வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து தான் அனுஷ்காவுக்கு தமிழிலும் அதிக வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தன.

முதல்கட்டமாக விஜயுடன் அவர் ’வேட்டைக்காரன்’ என்ற திரைப்படத்தில் நடித்தார். இதனையடுத்து சூர்யாவுடன் ’சிங்கம்’ சிம்புவுடன் ’வானம்’ விக்ரமுடன் ’தெய்வத்திருமகள்’ கார்த்தியுடன் ’அலெக்ஸ் பாண்டியன்’, ரஜினியுடன் ’லிங்கா’ அஜித்துடன் 'என்னை அறிந்தால்’ ஆர்யாவுடன் ‘சைஸ் ஜீரோ’ உள்பட பல படங்களில் நடித்தார். தற்போது அவர் நவீன் பொல்லிஷெட்டி இயக்கத்தில் உருவாகி வரும் ஒரு தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் போஸ்டர் நேற்று அவருடைய பிறந்த நாளில் வெளியாகி வைரல் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

2005ஆம் ஆண்டு முதல் திரையுலகில் 17 ஆண்டுகள் பல வெற்றி படங்களை கொடுத்து வரும் அனுஷ்காவுக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.