ஹஜ் யாத்திரை குறித்து முக்கிய தீர்மானம்!

09.06.2022 13:04:00

ஹஜ் யாத்திரைக்கு இந்த ஆண்டு முஸ்லிம்களை அனுப்ப முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக இந்த ஆண்டு ஹஜ்ஜில் பங்கேற்பதில்லை என முஸ்லிம்கள் முன்னதாகவே தீர்மானித்திருந்தனர்.

எவ்வாறாயினும் குறித்த நபர்கள் ஹஜ்ஜுக்கு தேவையான டொலர்களை தமது நண்பர்கள் மூலம் கொண்டு வந்தபின்னரே ஹஜ் கடமையை நிறைவேற்ற அனுமதிக்கப்படுவர் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவ்வருட ஹஜ் யாத்திரையில் 1,585 இலங்கையர்களுக்கு பங்குபற்ற வாய்ப்பு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.