இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட பதற்றம்! திடீரென பற்றியெரிந்த வணிகக்கப்பல்
இந்தியக் கடலோரப் பகுதியில் சென்றுகொண்டிருந்த சரக்குகளை ஏற்றிய வணிகக் கப்பல் மீது ஆளில்லா விமானம் (ட்ரோன் - Drone) மூலம் தாக்குதல் நடந்தப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலின் பொது அதிஷ்டவசமாக கப்பலில் பயணித்தவர்கள் எவருக்கும் எந்தவிதமான சேதமும் எப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தத் தாக்குதல் குறித்து மேலும் தெரியவருவதாவது,
இஸ்ரேலுடன் தொடர்புடைய லைபீரிய தேசிய கொடி ஏற்றிய வணிகக் கப்பல் ஒன்று சவுதி அரேபியாவில் உள்ள துறைமுகத்தில் இருந்து மசகு எண்ணெய் ஏற்றிக் கொண்டு புறப்பட்டுள்ளது.
இந்த கப்பல் இந்திய கடல் எல்லையில் அரபிக் கடல் வழியாக சென்றுகொண்டிருந்தபோது அதன் மீது ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலை அடுத்து, கப்பலில் தீ பற்றியுள்ளது, மாத்திரமல்லாமல் இந்தத் தாக்குதலால் இதுவரை ஏற்பட்ட இழப்புக்கள் பற்றிய தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
மேலும், இந்த சம்பவத்தை அடுத்து இந்திய கடலோர காவல் படைக்குச் சொந்தமான கப்பல் ஒன்று 20 பேருடன் அந்த வணிகக் கப்பலை நோக்கி சென்றுள்ளது.