சீமானின் திருச்சி மாநாடு காட்டும் புதிய திசை!

21.02.2026 13:17:23

திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாகத் தன்னை முன்னிறுத்தி வரும் நாம் தமிழர் கட்சி, இன்று திருச்சியில் நடத்தத் திட்டமிட்டுள்ள "மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு" பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.. இந்த மாநாட்டில் 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் ஒரே மேடையில் சீமான் அறிமுகம் செய்ய இருப்பது மற்ற அரசியல் கட்சிகளைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.. கடந்த 2016-ல் ஒரு சதவீத வாக்குகளுடன் தொடங்கிய சீமானின் அரசியல் பயணம், 2024 எம்பி தேர்தலில் 8.2 சதவீதத்தை எட்டியுள்ளது.

இந்த சீரான வளர்ச்சி என்பது சீமானின் தனித்துவமான "தனித்துப் போட்டி" என்ற கொள்கைக்கு கிடைத்த அங்கீகாரமாகவே பார்க்கப்படுகிறது. கூட்டணி அரசியலின்றி, பெண்களுக்கும் ஆண்களுக்கும் சம வாய்ப்பு வழங்கி வேட்பாளர்களை அறிவிப்பதில் அவர் காட்டும் வேகம் மற்றக் கட்சிகளுக்கு ஒரு சவாலாகவே இருக்கிறது.. திருச்சி நாம் தமிழர் கட்சி மாநாடு அந்தவகையில்தான் இன்றைய மாநாடும் இருக்க போகிறது.. ஆனால், இந்த மாநாடு வெறும் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் மட்டுமல்லாமல், ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகளை விமர்சிக்கும் ஒரு அரசியல் மேடையாகவும் அமையும் என்றே தெரிகிறது.

ஏனென்றால், சீமான் முன்வைக்கும் அரசியல் என்பது கடன் இல்லாத பொருளாதாரம் மற்றும் அரசுத் துறைகளின் தரம் குறித்த கேள்விகளை அடிப்படையாகக் கொண்டது.. அரசுப் பள்ளி மற்றும் மருத்துவமனைகளின் தரம் குறித்து அவர் எழுப்பும் கேள்விகள் சாமானிய மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. குறிப்பாக, எழும்பூர், ஆர்.கே.நகர், வேளச்சேரி போன்ற முக்கியத் தொகுதிகளில் இளைஞர்களுக்கும் சமூக ஆர்வலர்களுக்கும் அவர் வாய்ப்பளித்திருப்பது கட்சியின் அடித்தளத்தை உறுதிப்படுத்துகிறது. திருச்சியில் அவரது தாய் வெற்றிலை பாக்கு வைத்து மக்களை அழைத்த நிகழ்வு, இந்த மாநாட்டை ஒரு குடும்ப விழாவாக மாற்றியுள்ளது.

திராவிட கட்சிகள் இருந்தாலும், இந்த தேர்தலை சீமான் எப்படி சமாளிப்பார் என்பது சவாலான காரியம்.. காரணம், வலுவான கூட்டணி அமைத்துள்ள திராவிடக் கட்சிகள் மற்றும் புதிய அரசியல் வரவுகளுக்கு இடையே, தனது வாக்கு வங்கியைத் தக்கவைத்து அதை வெற்றியாக மாற்றுவது அவருக்கு பெரும் போராட்டமாக இருக்கும். எனினும், சீமானின் விடாமுயற்சியும், தளர்வில்லாத பேச்சாற்றலும் இளைஞர்கள் மத்தியில் அவருக்கு ஒரு நிலையான இடத்தை உருவாக்கியுள்ளது. தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், சீமானின் இந்த அதிரடி நகர்வுகள் தமிழக அரசியலில் ஒரு புதிய திசையை நோக்கி நகர்வதை உறுதி செய்கின்றன.

சீமானின் அரசியல் என்பது ஒரு நீண்ட காலத் திட்டமாகும்.. வாக்கு சதவீதம் அதிகரித்தாலும், அது சட்டசபை இடங்களாக மாறுமா என்பதே தற்போதைய கேள்வி. அவர் ஒரு தொகுதியில் நின்று வெற்றி பெறுவது என்பது அவரது தொண்டர்களுக்கு மிகப்பெரிய உற்சாகத்தை அளிக்கும். தம்பி விஜய் வருகை எனினும் தவெக வருகையை எப்படி எதிர்கொள்ள போகிறார்? தொடக்கத்தில் விஜய்யை "என் தம்பி" என்று உரிமையோடு அழைத்து வந்த சீமான், விஜய்யின் மாநாட்டுப் பேச்சிற்குப் பிறகு சற்றே கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளார்.

விஜய்யின் வருகை சீமானுக்கு ஒரு எச்சரிக்கை மணிதான். இதுவரை "மாற்று அரசியல்" என்று தனி ஓட்டத்தில் இருந்த சீமானுக்கு, இப்போது அதே பாதையில் ஒரு பலமான போட்டியாளர் கிடைத்துள்ளார். விஜய் அலை அலை விஜய் ரசிகர் மன்ற பலத்தைக் கொண்டு வரும்போது, சீமான் தனது 15 ஆண்டுகால அரசியல் உழைப்பை ஆதாரமாகக் காட்டுவார். இருவரும் மோதிக் கொண்டால் அது திராவிடக் கட்சிகளுக்குத்தான் வாய்ப்பாக முடியும். சீமான் தனது பேச்சாற்றலையும், கட்டமைப்பையும் இன்னும் கூர்மைப்படுத்தினால் மட்டுமே இந்த "விஜய் அலையை" அவரால் வெற்றிகரமாகக் கடக்க முடியும். மொத்தத்தில் ஒரு மாற்று அரசியலை மக்களிடம் கொண்டு சேர்த்ததில் அவர் வெற்றி பெற்றுள்ளார் என்றாலும், வரப்போகும் தேர்தலை எப்படி சமாளிக்க போகிறார்??? பொறுத்திருந்துந்து பார்ப்போம்..!!